Advertisment

தென் சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு: புழுதிவாக்கம்- சோளிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடக்கம்

சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி துவங்குகிறது.

author-image
Janani Nagarajan
புதுப்பிக்கப்பட்டது
New Update
தென் சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு: புழுதிவாக்கம்- சோளிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில் (Express Photo)

சென்னையின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு சென்னை நகருக்கு இலகுவாக பயணிப்பதற்காக மெட்ரோ ரயில் பாதை அமைக்கவிருக்கிறது. இது, கோவிலம்பாக்கத்தில் உயர்மட்ட வழித்தடத்திற்கான கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்துள்ளதால்,  மெட்ரோ ரயில் பாதையின் கட்டுமானப்பணி தொடங்கியுள்ளன. 

Advertisment

11.6 கிமீ உயரமான மெட்ரோ நடைபாதையை புழுதிவாக்கத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை அமைப்பதற்காக, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) மூலம் ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம் - கே.இ.சி. இன்டர்நேஷனலிடம் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது.

மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரையிலான இரண்டாம் கட்ட மற்றும் ஐந்தாம் கட்ட கட்டுமானத்திற்கான காலக்கெடுவை நவம்பர் 2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது. 118.9 கிலோமீட்டருக்கு கட்டப்படும் இந்த ரயில் பாதை 2026 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அஸ்திவாரம் அமைப்பதற்கும் தூண் கட்டுவதற்குமான பைலிங் பணிகள் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை எலிவேட்டட் காரிடாரின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஒட்டுமொத்த அட்டவணையில், சில மாதங்கள் பின்தங்கியிருக்கலாம், ஆனால் எங்களால் காலக்கெடுவைக்குள் முடிக்க முடியும் என்று மெட்ரோ ரயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது கட்டப்படும் ரயில் பாதை, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல், மேடவாக்கம் கூட் சாலை, காமராஜ் தோட்டத் தெரு, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம், குளோபல் ஆஸ்பத்திரி மற்றும் எல்காட் ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ நிலையங்களுடன் இணைக்கப்படும். இதனால், மக்களால் எளிதாக பயணிக்கும் வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சென்னையின் முக்கிய புறநகர் பகுதிகளை இணைப்பதற்கு உதவியாக இருக்கும். 

தாம்பரம் உள்ளிட்ட தென் புறநகர் பகுதிகளில் இருந்து ஐ.டி. காரிடாருக்கு சுமார் ஒரு லட்சம் பேர் பயணிக்கின்றனர். மேடவாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து பேருந்தில் பயணிக்கும் மக்களுக்கு பேருந்து முனையும் அமைக்கப்படவில்லை. அவசர போக்குவரத்துக்காக மக்கள் ஷேர் ஆட்டோக்களின் உதவியை தான் நாடியுள்ளார்கள். இந்த புதிய மெட்ரோ ரயில் பாதை, இப்பிரச்சினைகளை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Metro Rail Chennai Metro Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment