புஷ்கரம் என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மிகத் திருவிழா. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி இந்த விழா நடத்தப்படுகிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு.
புஷ்கரம் வழிபாடு :
இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகள் ராசிக்கு மாறியிருகிறார்.அதனால், விருச்சிகம் ராசிக்கு உரிய தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு நதிகளிலும் புஷ்கரம் தினம் கொண்டாடப்படுவதால் இதை ‘மகா புஷ்கரம்’ என்ற பெயரிலும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த வழிப்பாட்டிற்காக ஏராளமான மக்கள் நெல்லையை நோக்கி பயணித்து வருகின்றனர். நெல்லை மக்கள் அனைவரும் இந்த சிறப்பு வழிபாட்டிற்காக தேவைப்படும் பூஜை பொருட்கள் மற்றும் மாலை, பூ என அனைத்தையும் கொடுத்து வழிப்பட்டு வருகின்றனர்.
நேற்று முன் தினம் அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெற்ற புஷ்கர விழாவில் தமிழக ஆளுநர் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி எடுத்து, பூஜையை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியில் உள்ள இஸ்லாமியா்கள் அப்பகுதியில் இள்ள இந்துக்களுடன் இணைந்து புஷ்கர விழாவில் பங்கேற்றனா்.
மத நல்லிணக்க நோக்கத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளியூா்களில் பணிபுரியும் மேலச்செவல் பகுதி இளைஞா்களும் கலந்து கொண்டனா். நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி, ஆற்றங்கரை அருகில் கூட்டு பிராா்த்தனை மேற்கொண்டனா்.
அதே போல் மகாபுஷ்கரம் விழாவில் கலந்துக்ம்கொள்ள தாமிரபரணியில் திரளான மக்கள் சூழந்தனர்.இதில் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். அப்போது நடிகை கஸ்தூரியும் கூட்ட நெரிசலில் நுழைந்து தாமிபரணியில் புனித நீராடினர்.