மின்சாரத் துறையில் ஊழல் செய்துவிட்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டினார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
சாராயத்திற்கும், கல்லுக்கும் மாற்றாக டாஸ்மாக் மட்டுமே மது விற்பனை செய்யும் என்று அறிவித்து 5360 சில்லரை டாஸ்மாக் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. துவக்கத்தில் இந்த டாஸ்மாக்கிற்கு இரண்டு ஆலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 19 டாஸ்மாக் ஆலைகள் உள்ளது.
இதில் 15 ஆலைகள் திமுக குடும்பத்துடையது. திமுக அமைச்சர்கள் நேரடியாக ஆலைகளை நடத்துகின்றனர். தமிழ்நாட்டு மக்களை குடிக்க வைக்க வேண்டும் என்று நோக்கத்தோடு திமுக அரசு செயல்படுகிறது.
நம்பர் இல்லாமல் 200 கடைகள் கோவையில் சட்டவிதி மீறி உள்ளது.
சட்டவிரோத பார்களில் இருந்து வரும் பணம், கரூர் பார்ட்டி என்ற பெயரில் செந்தில் பாலாஜிக்கு செல்கிறது. அரசுக்கு செல்ல வேண்டிய ஐம்பதாயிரம் கோடி ரூபாய் போகவில்லை. செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுத்து உள்ளோம். ஆர்ப்பாட்டம் பேரணி நடத்தினோம். ஆனால் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கு ஆபத்து. முதல்வர் ஏன் தயங்குகிறார்.
ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 15 வரை 100 பொது கூட்டங்கள் புதிய தமிழகம் சார்பில் நடத்த உள்ளோம்.
5362 சட்டவிரோத பார்களை நடத்தி வரும் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் தொடர் பொதுக்கூட்டங்கள் விழிப்புணர்வாக நடத்தப்படும். திமுக அரசு வாக்குறுதியில் மின் கட்டண உயர்வு இருக்காது என்று சொன்னார்கள்.
பல தொழில் முனைவோர்கள் ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், மீண்டும் மின்கட்டண உயர்வு அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மின்சாரத் துறையில் ஊழலை தடுத்தாலே நட்டமில்லாமல் மின்வாரியத்தை நடத்த முடியும். தரமற்ற நிலக்கரியை வாங்குகின்றனர். அதனால் உற்பத்தி பாதிப்பு. பெரிய அளவில் மின்சாரத் துறையில் ஊழல் செய்துவிட்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். மின் துறையில் இழப்பு ஏற்பட்டால் அரசு சரி செய்ய வேண்டும் மக்கள் தலையில் செலுத்தக் கூடாது.
செந்தில் பாலாஜி பல தில்லு முல்லுகளில் ஈடுபடுகிறார். அவரை குற்றவாளி கூண்டில் நிறுத்துவோம்.
சட்ட விரோதமாக பெட்டிக்கடை வரை டாஸ்மாக்கை கொண்டு சேர்த்து விட்டனர். பெட்டி கடை வரை மது விற்பனை செய்யப்படுவதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.
மனமகிழ் மன்றங்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளை மூடுகின்றனர். இதில் மதுவிலக்கு கொள்கை கிடையாது. தனியார் விற்பனை குறையக்கூடாது என்பதற்கு டாஸ்மாக்குகளை மூடுகின்றனர். இந்த திமுக அரசு தேவைப்பட்டால் மத்திய அரசை துணை கொள்வார்கள், இல்லை என்றால் மத்திய அரசின் மீது பழி போடுவார்கள்.
ஸ்டாலின் அரசு ஆணவப் போக்காக உள்ளது. மோடியுடன் மோத முடியாது என்பதால் ஆளுநருடன் மோதுகின்றனர். தமிழ்நாடு இந்தியாவோடு இல்லை என தீர்மானத்தை போட்டுக் கொள்ளுங்கள். இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.