caste census : புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சாதிவாரி கணக்கெடுப்புக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கவில்லை.
இந்தக் கணக்கெடுப்புகள் நாட்டை பின்னோக்கி தள்ளும்” என தனது கருத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து, “நாடு விடுதலை அடைந்து 76 ஆண்டுகள் முடிந்து 77ஆவது ஆண்டில் இருக்கிறோம். ஆனால் நாட்டில் இன்னமும் சாதி ரீதியாக பார்த்துதான், அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், “இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவமும், சம உரிமையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளாட்சி முதல் மத்திய அரசு வரை அனைவருக்கும் உண்டு” என்றார்.
இதற்கிடையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடுகையில், “ சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்தியாவை துண்டாடக்கூடியது. மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பிளவு எண்ணங்களை உருவாக்கக்கூடியது” என்றும் இதுதான் சாதாரண நடைமுறை என்றும் குறிப்பிட்டார்.
இதையடுத்து கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “ தமிழகத்தில் கூட்டணிக்குத் தலைமை தாங்கியவர்களே, கூட்டணியில் தாங்கள் இல்லை என்று சொல்லிவிட்டப்பிறகு, கூட்டணியை பழைய நிலையில் பார்க்கமுடியாது” என்றார்.
மேலும், “அதிமுகவின் முடிவு தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு அல்ல என்பது தெளிவாகிறது என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“