scorecardresearch

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் – புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் தடுக்கிறார்கள். தேர்தலை நிறுத்த வேண்டும் – கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் – புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஈரோடு தேர்தல் தொடர்பாக பேட்டி அளித்தார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என கோவையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படியுங்கள்: 140 கி.மீ தூரம் பயணித்து கோவை மாநகர பகுதிக்குள் நுழைந்த மக்னா யானை; வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

அந்த சந்திப்பில் அவர் பேசும்போது, 27 ம் தேதி வாக்குபதிவு. ஆனால் தேர்தலில் நடைபெறும் விஷயங்கள் ஜனநாயகத்துக்கு புறம்பாக உள்ளது. இந்திய அரசியலில் கேள்விப்படாத அத்துமீறல்கள் இந்த இடைத்தேர்தலில் நடைபெறுகிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளுக்கு முன்பாக பந்தல் போட்டு அமர்ந்துள்ளனர். பொதுமக்கள் வீடுகளில் இருந்து சுதந்திரமாக வர முடியவில்லை. அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஆடு மாடு போல அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்களை விருப்பப்பட்ட கட்சிக்கு செல்ல விடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம். தேர்தல் ஆணையம் இப்படி தேர்தலை நடத்துவது கேலிக்கூத்து. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். முறையான விசாரணை செய்ய வேண்டும். ஆளும் கட்சியினர் வாக்காளர்களை கடத்தி வைத்துள்ளனர். மைக்ரோ அப்சர்வர் செயல்பட வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு தேவைப்பட்டால் நாங்களும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம். ஆளுங்கட்சியினர் எத்தனை தேர்தல் பணிமனை வைத்தாலும் வெற்றி பெற வாய்ப்பு குறைவு. இது ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் மாறும். மற்ற அரசியல் கட்சியினர் வேறு தொகுதியில் இருந்து தான் அழைத்து வந்து பேசுகின்றனர். அங்குள்ள மக்களிடம் பேச முடியவில்லை.

மத்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணைய நடவடிக்கையை கவனிக்க வேண்டும். 2009 ஆண்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை கொன்று குவித்த பிறகு இலங்கை அரசு முள்வேளியில் மக்களை அடைத்து வைத்தது போல இப்போது இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் செயல்படுகின்றனர்.

இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என்றால் முறைகேடுகள் நடைபெறுகிறது. அறிவிப்பது மட்டும்தான் தேர்தல் ஆணையம் போலவும் ஜனநாயகம் இருக்காதது போலவும் உள்ளது. இது பேராபத்து. தவறான முன்னுதாரணம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல. கண்ணைக் கட்டி உள்ளனர். ஜனநாயக வாதிகள் நீதிமன்றத்தை நாட வேண்டும். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் தடுக்கிறார்கள். தேர்தலை நிறுத்த வேண்டும். பல முன்னுதாரணங்கள் உள்ளது. என்று கூறினார்.

அருந்ததியர் சமூகம் குறித்து சீமானின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த கிருஷ்ணசாமி எங்கள் தளம் மாறிவிட்டது என்று கூறினார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Puthiya thamilagam krishnasamy says ec should stop erode by poll