puthiya tamilagam, krishnasamy, loksabha election, chennai, admk, புதிய தமிழகம், கிருஷ்ணசாமி, மக்களவத தேர்தல், சென்னை, அதிமுக
மக்களவை தேர்தலில், என் தோல்விக்கு ஊடகங்களே காரணம் , மக்கள் அல்ல என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழக மக்களவை தேர்தலில், 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், 1 இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட ஒரு கட்சி கூட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி, தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது, இந்த தேர்தலில், என்னை மக்கள் தோற்கடிக்கவில்லை ; இந்த ஊடகங்கள் தான் தோற்கடித்தன. அடுத்த மாதம் முதல் எல்லா கிராமங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக கூறினார்.
Advertisment
Advertisements
தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் தோல்வி குறித்த பத்திரிகையாளரின் கேள்வியால் டென்சனான கிருஷ்ணசாமி, நீ எந்த ஊரு, நீ என்ன ஜாதி என்று கேட்டதால் அங்கு சிறிதுநேரம் பரபரப்புநிலவியது. கட்சியினருக்கும், பத்திரிகையாளருக்குமிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news