scorecardresearch

லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்: தீர்வு கோரி ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி மனு

இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர், மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்து மனு அளிக்க வந்தார்.

express news

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர், மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்து மனு அளிக்க வந்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “திருச்சி முதலியார் சத்திரம் 50-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஆர்.சி., காம்போண்ட் பூந்தோட்டம் பகுதியில் 29 வீடுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல், வீடுகளில் உள்ள கழிவறைகளில் நிரம்பி வழிகிறது.

இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்றுகள் ஏற்படுகிறது. மேலும் இந்த பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். லஞ்சம் கொடுக்க மறுத்த 9 வீடுகளில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யாமல் தற்போது வரை காலம் தாழ்த்தி வருகின்றனர்”, என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமாரிடம் மனு அளித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pwd complaints to collector about bribe seeking officials trichy