Advertisment

வாய்க்காலை தொலைத்த மக்கள் ; 18 ஆண்டுகளுக்கு பிறகு மீட்ட பொதுப்பணித்துறை

சோறு போட உதவும் ஒவ்வொன்றையும் இம்மக்கள் எப்படித்தான் மறக்கிறார்கள் அல்லது ஆக்கிரமிக்கின்றார்கள் என்றே புரியவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PWD workers recoverd lost irrigation canal after 18 years at Chidambaram

PWD workers recoverd lost irrigation canal after 18 years at Chidambaram

ஒரு திரைப்படத்தில் வடிவேலு தன்னுடைய நிலத்தில் இருந்த வற்றாத கிணத்தை காணவில்லை என்று கிராம நிர்வாகிகளிடம் புகார் அளிப்பது போல் ஒரு சம்பவம் சிதம்பரம் அருகே நடந்துள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்திற்காக பயன்படுத்திய வாய்க்கால் காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. சோறு போட உதவும் ஒவ்வொன்றையும் இம்மக்கள் எப்படித்தான் மறக்கிறார்கள் அல்லது ஆக்கிரமிக்கின்றார்கள் என்றே புரியவில்லை.

Advertisment

சிதம்பரம் வயலூர் அருகே இருக்கும் லால்புரம் பகுதியில் பாசன வாய்க்கால் மூலம் 280 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. கண்மாய் ஆக்கிரமிப்பு காரணமாக விவசாய நிலங்களுக்கு வந்து சேர வேண்டிய நீர் வராமல் 18 வருடங்களாக பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இம்முறை பாசன நீரை பெற்றே தீர வேண்டும் என்று முடிவெடுத்த விவசாயிகள் பொதுப்பணித்துறையினரிடம் தங்களின் குறைகளை கூற பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த வாய்க்காலில் இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி தூர்வாரி சுத்தம் செய்து வருகின்றனர்.

இத்தனை நாட்கள் செயல்பாட்டில் இல்லாமல் இருந்த வாய்க்கால் சுத்தம் அடைந்துள்ளது. நடப்பு பருவத்தில் நிச்சயம் இந்த வாய்க்கால் மூலம் பலன் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் உள்ளூர் மக்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment