ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுக, பாஜக என்ன செய்யப்போகிறது?

இந்நிலையில், மற்ற கட்சிகள் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது குறித்தும், அந்தந்த கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் பார்ப்போம்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மற்ற கட்சிகள் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது குறித்தும், அந்தந்த கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் பார்ப்போம்.

கனிமொழி எம்.பி., தி.மு.க.

“இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மறுநாளே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.
ஆனாலும், அதிமுக அரசாங்கத்தை நிராகரிக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதனால், வெற்றி வாய்ப்பு திமுகவுக்குத்தான்”.

முத்தரசன், மாநில பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு செய்வோம்”.

தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி:

“ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவு குறித்து ஓரிரு நாளில் எங்களது முடிவை அறிவிப்போம்”.

தமிழிசை சௌந்தரராஜன், தமிழக தலைவர், பாஜக:

“கட்சியின் ஆலோசனைக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து முடிவு செய்வோம்.”

திருநாவுக்கரசர், தலைவர், தமிழக காங்கிரஸ் கமிட்டி:

“ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: R k nagar byelection dmk bjp reactions

Next Story
ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்புR.K.Nagar byelection, election commission,chennai high court, AIADMK
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com