மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி அடையாளம் காட்டிய தமிழக ஆளுமைகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் மோடி, நாட்டு மக்களோடு உரையாடும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் 100 வது எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. மனதின் குரல் நிகழ்வு நாடு முழுவதும் உள்ள மக்களால் கேட்கப்படுகிறது. 100வது எபிசோடை முன்னிட்டு திரையிடல் நிகழ்வு சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இதுவரை ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரால் அடையாளம் காணப்பட்டு சிறப்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஆளுமைகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி“ எளிமையான மனிதர்களை அடையாளம் கண்டு , அவர்களின் வெற்றிக்கதைகளை நாட்டு மக்களுக்கு கூறியது, இந்த நிகழ்ச்சி வெற்றி பெற முக்கிய காரணம். கிட்டதட்ட 23 கோடி மக்கள் இந்த நிகழ்வை கேட்கின்றனர். இந்த நிகழ்வு நமது நாட்டையே மாற்றியுள்ளது. இந்த நிகழ்வின் சிறப்பு தன்மையே இதில் துளி அளவுகூட அரசியல் இல்லை என்பதுதான். இந்நிலையில் பிரதமர் மோடி இந்த நிகழ்வில் அரசியல் பற்றி பேசவில்லை. மிகவும் எளிமையான, சாதராண நபர்கள் பற்றியும் அவர்கள் செய்து வரும் மிகப் பெரிய விஷயங்கள் பற்றியும் பேசினார்” என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“