முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள வைத்திலிங்க வீட்டில் அதிகாலை முதல் சோதனை நடந்து வருகிறது. இதேபோல், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு சோதனை விடுதி நிர்வாகத்திடம் சாவி வாங்கி சோதனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சி.எம்.டி.ஏ-வுக்கும் அப்போது அமைச்சராக இருந்தநிலையில், தற்போது சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
2011-16 காலத்தில் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றுள்ள ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) ஆதரவாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“