சட்டசபையில் ராமசாமி படையாட்சியின் முழு உருவப்படம் வைக்கப்படும் : முதல்வர் பழனிசாமி உறுதி!

சிலர் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விமர்சித்து வருகின்றனர்

சென்னையில் வன்னியர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்ட்ட பாராட்டு விழாவில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் சட்டசபையில் ராமசாமி படையாட்சியின் முழு உருவப்படம் என்று உறுதியளித்தார்.

ராமசாமி படையாட்சியின் முழு உருவப்படம் :

முன்னாள் அமைச்சர் மறைந்த ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டதற்காக வன்னியர் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அதன் பின்பு பேசி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதை குறிப்பிட்டு பேசினார்.

பின்பு, வன்னியார்களுக்காக கட்சி நடத்துவதாக கூறிக் கொள்பவர்கள் கூட இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்று மறைமுகமாக சாடினார். மேலும் ”எங்கள் அரசு எடுத்து வரும் நடவடிக்கையை பொறுத்து கொள்ளாத சிலர் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விமர்சித்து வருகின்றனர். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படாமல், தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

அதனைத்தொடர்ந்து, சட்டசபையில், ராமசாமி படையாட்சியின் முழு உருவப்படம் வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close