ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கணபதிபுரத்தை சேர்ந்த சிறுவன் நிர்மல். நிர்மல் கடந்த ஜூன் 27ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது வெறிநாய் கடித்துள்ளது. அப்போது அவரது பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்காமல் நாட்டு வைத்தியம் செய்ததாக தெரிகிறது.
இதன்பின் ரேபிஸ் நோய் தாக்கம் அதிகரித்ததாக தெரிகிறது. இதையடுத்து சிறுவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் ரேபிஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்து சிறுவன் நிர்மல் உயிரிழந்தான்.
இதையடுத்து நேற்று இரவு சிறுவனின் உடல் அமரர் ஊர்தியில் வைக்கப்பட்டு வீட்டுக்கு எடுத்து வராமல் நேரடியாக மயானத்திற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்க செய்யப்பட்டுள்ளது. சிறுவனை நாய் கடித்தவுடனேயே உரிய சிகிச்சை எடுத்திருந்தால் அவரை உயிரை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“