Advertisment

பேரிடர் மேலாண்மை கமிஷனராக ராதாகிருஷ்ணன் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

Tamil nadu government : நாகப்பட்டினம் கலெக்டராக பணியாற்றி சுனாமி சமயத்தில் திறம்பட பணியாற்றி மக்களிடையே நன்மதிப்பை பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை கமிஷனராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
Oct 10, 2019 12:03 IST
tamil nadu, J Radhakrishnan, covid 19, coronavirus

tamil nadu, J Radhakrishnan, covid 19, coronavirus

நாகப்பட்டினம் கலெக்டராக பணியாற்றி சுனாமி சமயத்தில் திறம்பட பணியாற்றி மக்களிடையே நன்மதிப்பை பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை கமிஷனராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களின் கலெக்டர்களை மாற்றியுள்ளதோடு மட்டுமல்லாது பல்வேறு துறை அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மதுரை கலெக்டராக இருந்த டி.எஸ்.ராஜசேகர், நீண்ட விடுப்பில் சென்றதையடுத்து, அரியலூர் கலெக்டராக இருந்த டி.ஜி. வினய், மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் சப் கலெக்டராக இருந்த ரத்னா, அரியலூர் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆற்றல் துறை செயலாளராக இருந்த பி.சந்திரமோகன், போக்குவரத்து துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராக இருந்த அசோக் டோங்ரே, சுற்றுலா, கலாச்சாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அபூர்வா வர்மா, தமிழக கர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

#Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment