சென்னை வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 166.24 மீட்டர், ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீட்டர் நீளத்துக்கு சாய்தள சாலை அமைக்கப்பட்டது. இதற்கு ரயில்வே ரூ.40 கோடியே 48 லட்சமும், மாநகராட்சி ரூ.30 கோடியும் ஒதுக்கியுள்ளது.
இதில் யானை கவுனி மேம்பாலத்தில் வால்டாக்ஸ் சாலையில் ஒருவழிப்பாதை இருவழிபாதையாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் பாலம் திறக்கப்பட்டால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். ஏனெனில் வேப்பேரிக்கும்-ஜார்ஜ் டவுணுக்கும் இடையே செல்லும் சரக்கு வாகனங்கள் பேசின் பாலத்தை சுற்றிக் கொண்டு தற்போது செல்கின்றன.
இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், “யானை கவுனி மேம்பாலத்தில் நடந்த பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றுள்ளன. இன்னும் 10 நாள்களில் மேம்பாலம் திறக்கப்படும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“