சென்னையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் ராதாகிருஷ்ணன் காரின் முன் பகுதி சேதமடைந்தது.
Tamil Nadu Government Co Operative Societies Secretary Radhakrishnan's car met with an accident in Chennai Tamil News
Radhakrishnan IAS car met accident in Chennai Tamil News: சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. இருப்பினும், காரின் முன்பகுதி பெரியளவில் பாதிப்பு இல்லை என்றும், ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவும் இன்றி தப்பினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
இந்த விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல்நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசார் அங்கு இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ததுடன், சுனாமி தினத்தியொட்டி கடற்கரையில் அஞ்சலி செலுத்தினார் ராதாகிருஷ்ணன்.