சென்னையில் வரும் புதன்கிழமை முதல் தெருநாய்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தசென்னை மாநாகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ” ஒரு பக்கம் நாய் ஆர்வளர்கள், நாய்கள் மோசமாக நடத்தப்படுவதாக புகார் கொடுக்கிறார்கள். இனியொரு பக்கம் வெறிநாய்களை கட்டுப்படுத்துவது ஒரு சவாலாக இருக்கிறது. மனிதர்களை துரத்தி சென்று கடிக்கும் நாய்கள், அவை வீட்டு நாய்களாக இருந்தால் கண்காணிப்பாளிடம் அதை சரியான பராமரிக்க சொல்கிறோம்.
தெருநாயாக இருந்தால் அதை அப்புறப்படுத்தி, கண்காணித்து, கருத்தடை செய்து அதற்கு பிறகு அது வெறித்தனமாக நடந்து கொள்ளவில்லை என்றால் தெருவில் மீண்டும் விடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் தெருநாய் கணக்கெடுப்புப் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சென்னை மாநாகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர், அடுத்த 3 மாதங்களுக்குள் மாநகராட்சி அனுமதி பெற வேண்டும். கடந்த ஒரு ஆண்டில் 1,05,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சாலையில் சுற்றித்திரிந்த 1,150 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன” என்று பேசினார்.