Advertisment

ராதாபுரம் தொகுதிக்கு இன்று மறு வாக்கு எண்ணிக்கை

Radhapuram election Vote count tomorrow: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் பதிவான 19, 20 மற்றும் 21-வது சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் நாளை மீண்டும் எண்ணப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu news today live

Tamil nadu news today live

Radhapuram election Vote count tomorrow: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் பதிவான 19, 20 மற்றும் 21-வது சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் இன்று மீண்டும் எண்ணப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தபால் வாக்குகள் தான் முதலில் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்குகள் எண்ணும்போது, இரு தரப்பிலும் சில ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த வாக்குகள் எண்ணப்படவில்லை. பின்னர், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பிற தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இவற்றில் அதிமுக, அதிக தொகுதிகளில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ராதாபுரம் தொகுதி தேர்தல் அதிகாரிகள், அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக செயல்படத் தொடங்கினர். பிற்பகலில், தபால் வாக்குகளை எண்ணுமாறு தேர்தல் அதிகாரியிடம் நானும், கட்சி முகவர்களும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது துணை ராணுவப் படை, போலீஸார் எங்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றி விட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் இருந்து எங்களை வெளியேற்றிய பின்னர், 19 முதல் 21 வரையிலான சுற்றுகள் எண்ணப்பட்டு, அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரைக்கு அதிக வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

அதன் பின்னர், தபால் வாக்குகளில் எனக்கு சாதகமாக பதிவான 200 வாக்குகள் செல்லாது என்று அறிவித்தனர். இதையடுத்து, என்னைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றிப் பெற்றதாக தொகுதி தேர்தல் அதிகாரி அறிவித்து விட்டார். வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. எனவே, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிப் பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், கடந்த 1 ஆம் தேதி, ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் வகையில் அந்த தொகுதியில் பதிவான 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், பதிவான தபால் வாக்குகளையும் அக்டோபர் 4 ஆம் தேதி உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளரிடம் ஒப்படைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான உத்தரவை ரத்து செய்ய கோரி இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்பதுரை தரப்பு மூத்த வழக்கறிஞர் ராமானுஜம் ஆஜராகி, பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீர்த்து போகச் செய்யும் நிலை உருவாகும். உச்ச நீதிமன்றத்தில் அப்பாவு தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளதால், ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்காது என்பதால் உயர்நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு 3 வாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும், தன் மீது எந்த தவறும் இல்லை எனவும் தெரிவித்தார்.

திமுக வேட்பாளர் அப்பாவு தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் ஆஜராகி வாக்குகள் எண்ணுவதில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளது. நீதிமன்றம் முடிவுக்கு வந்த பிறகு தான் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதால், தடை எதும் விதிக்க முடியாது. இறுதியாக வழங்கப்படும் தீர்ப்பை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றம் செல்ல முடியும்

இறுதி தீர்ப்பு வழங்கும் முன் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க எந்த சட்டமும் அதிகாரம் வழங்கவில்லை எனவே மறு வாக்கு எண்ணிக்கை தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து, உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரிய இன்பதுரையின் கோரிக்கையை நிராகரித்து அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பின்னர், இந்திய தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் உத்தரவுபடி மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் தபால் வாக்குகள் நாளை ஒப்படைக்கப்படும் என நேற்று தெரிவித்தார்.

இதனையடுத்து, நீதிபதி வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்குகள் இன்று காலை 11.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் எண்ணப்படும் அதற்கு தேவையான பணியாளர்களையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொறியாளர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பணியாளர்களை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அப்போது இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால் இன்று மறு வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்க வேண்டும் என கோரினார்.

அப்போது நீதிபதி உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக இந்த நீதிமன்றம் அமல்படுத்தும். ஆனால், தற்போது எந்த தடை உத்தரவும் இல்லாத நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது. இன்று காலை 11.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

Chennai High Court Dmk Aiadmk Madras High Court Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment