Advertisment

நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள்: ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் கோயிலில் அங்கப்பிரதட்சணம்

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் விருதுநகர் பாராசக்தி கோயிலில் அங்கப்பிரதட்சணம் வழிபாடு செய்தார்

author-image
WebDesk
New Update
Radhika virudhunagar

Radhika Sarathkumar

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கடந்த முறை போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார்.

Advertisment

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி சார்பாக அக்கட்சியின் நிறுவனரும் மறைந்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் அந்தத் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

சரத்குமார் மனைவியும் நடிகையுமான ராதிகா, பாஜக சார்பாக விருதுநகரில் போட்டியிடுகிறார். இதனால், விருதுநகர் மக்களவைத் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

ராதிகாவுக்கு உறுதுணையாக அவரது கணவரும், நடிகருமான சரத்குமாரும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நாளை மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் விருதுநகர் பாராசக்தி கோயிலில் அங்கப்பிரதட்சணம் வழிபாடு செய்தார். இந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.

Credit: Thanthi TV Twitter                                                     

நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள ராதிகா, நீண்டகாலமாக பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

ராடன் மீடியா என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் இருக்கிறார். இதன் மூலம் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறார். சின்னத்திரையில் "சித்தி" தொடர் மூலம் முத்திரை பதித்தவர்.

2021 முதல் சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக ராதிகா களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment