சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி ஆலன் கிரைசா என்ற 3-ம் ஆண்டு மாணவர் படித்து வருகிறார். அதே போல, கவின், தியானேஷ் ஆகிய இருவரும் 5-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் வைத்து 3-ம் ஆண்டு மாணவர் ஆலன் கிரைசா மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது. ஆலன் கிரைசா மீதான இந்த தாக்குதல் ராகிங் கொடுமையால் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் காயமான ஆலன் கிரைசா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் கவின், தியோனேஷ் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராகிங் செய்து பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட சம்பவத்தில், மருத்துவ கல்லூரி நிர்வாகம் சீனியர் மாணவர்கள் 2 பேரையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதில் தியானேஷ் என்ற மாணவர் தந்தை டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ் டி.எஸ்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பீர்பாட்டிலால் தாக்கி ராகிங் கொடுமையில் ஈடுபட்ட டி.எஸ்.பி மகன் உள்பட 2 பேர் சஸ்பெண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“