Raghava Lawrence : கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆதோடு பெரும்பாலான உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக திறந்திருக்கும் சில உணவகங்களிலும் அதிகம் பேர் பார்சல் வாங்கி சாப்பிட முடிவதில்லை.
புலம் பெயர் தொழிலாளர்கள், வீடுகளின்றி வசிப்போர், பணி ரீதியாக வீடுகளை விட்டு வெளியே தங்கியிருப்போர் ஆகியோர்கள் சாப்பாட்டுக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் அனைத்து அம்மா உணவகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
#COVID19 தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களிலுள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டிற்காக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ள நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி.@chennaicorp@offl_Lawrencepic.twitter.com/A0EkaFDfRA
பல இடங்களில் அம்மா உணவகங்களில் இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டிற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சம் அளித்துள்ளார். இந்தத் தகவலை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”