ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக நின்றால் மட்டுமே ஆதரவு என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரவித்தார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவருடைய லட்சக் கணக்கான ரசிகர்களில் ஒருவனாக இருந்து எந்த எதிர்பார்ப்பும் இன்றி சமூதாயத்துக்காக எனது சிறந்த சேவையை செய்வேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் எழுதிய ட்விட்டர் பதிவில் ,"என்னுடைய கடைசி ட்விட்டர் பதிவுக்கு பின், ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கும் முதல்வர் வேட்பளாரை நீங்கள் ஆதரிப்பீர்களா? என்ற கேள்வியை பலர் என்னிடம் கேட்டனர். அந்த கேள்விக்கு நான் பதிலளிக்கு விரும்புகிறேன். மிகவும், நேர்மையாக சொல்ல வேண்டுமெனில்,முதலவர் வேட்பாளாராக ரஜினி இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். லீலா மாளிகையில் தலைவர் முடிவை வெளிப்படையாக அறிவித்தார். இந்த முடிவை முழு மனதோடு என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருப்பினும், எதிரான நிலைப்பாடு வேண்டாம் என்ற காரணத்தால் அப்போது நான் அந்த முடிவை வரவேற்றேன். என்னைப் போலத் தான்,அவரின் ரசிகர்களின் மனநிலையும் உள்ளது. இதுகுறித்து, நான் தலைவரிடம் கடந்த வாரங்களில் உரையாடும் போது கூட, முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எனவே, ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக நின்றால் மட்டுமே ஆதரவு, மற்றவர்களுக்கு கிடையாது. தலைவர் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள உறுதியாக முயற்சிப்பேன். முடியாத பட்சத்தில், எனது தனிப்பட்ட சேவையை நான் தொடருவேன்" என்று தெரிவித்தார்.
மேலும், முதல்வர் வேட்பாளராக களத்தில் இறங்க வேண்டும் என்று தலைவரை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். எதிர் காலத்தில், யாரை வேண்டுமானாலும் முதலவர் வேட்பாளாராக அறிவித்துக் கொள்ளலாம். ஆனால், இம்முறை ரஜினி முதல்வர் வேட்பாளாராக இருக்க வேண்டும். இந்த கோரிக்கையை, அவரின் ரசிகர்களும் முன்னெடுக்க வேண்டும். ஏனெனில், அவர் முதல்வர் வேட்பாளாராக இறங்குவார் என்று என்மனம் சொல்கிறது. நீங்க வந்தா நாங்க வறோம் , இப்ப இல்லனா வேற எப்போ. நவம்பர்? " என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.