நடந்து முடிந்த தர்பார் ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய ராகவா லாரன்ஸ் ரஜினியின் பெயரைக் கெடுக்கும் வகையில் பேசுவது அந்த மனிதருக்கு நல்லதல்ல என்று கூறி தனது உரையை முடித்தார்.
Advertisment
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
அவரின் உரையில் இருந்த முக்கிய சாரம்சங்கள், ' தலைவருக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்க… அது வந்த பிறகு தெரியும். தலைவர் 96லயே அரசியலுக்கு வந்திருக்கணும் சொல்றாங்க.வந்த பதவியை வேண்டாம்-னு சொன்ன தலைவரை எங்கயாவது பார்த்து இருக்கீங்களா?. அவருக்கு அப்போ விருப்பம் இல்ல.
Advertisment
Advertisements
ஆனால், இந்த வயசுல அவருக்கு பணம் வேண்டுமா, புகழ் வேண்டுமா? மோடியே அவர் வீட்டுக்கு வந்து பார்த்துட்டு போறார். படத்தின் பப்ளிசிட்டிக்காக அவர் பேசுகிறார் என்கிறார்கள். டேய்… பப்ளிசிட்டிக்கு பேரே சூப்பர் ஸ்டார் தான்டா.
நான் இந்த மேடையில் இப்படி பேசினத்துக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை. ஆனால் அவர் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல' என்றார். எவ்வாறாயினும், அந்த பேச்சில் அந்த குறிப்பிடப்பட்ட அரசியல் தலைவரின் பெயரை வெளிப்படையாய் சொல்லவில்லை லாரன்ஸ்.
இதனையடுத்து, ரஜினியின் எழுபதாவது பிறந்த நாளையடுத்து காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகவா லாரன்ஸ், மீண்டும் சீமானைத் தாக்கி பேசியுள்ளார். அந்த பேச்சில் உள்ள முக்கிய சாரம்சங்கள், " தமிழ்த்தாயின் மூத்த பிள்ளை என்று தன்னை சொல்லிக் கொண்டிருக்கிறார், அப்படியானால் நாங்கள் என்ன அமெரிக்காவின் பிள்ளைகளாக? அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், அந்த ஓட்டப் பந்தயத்தில் ஓடி ஜெய்ப்பவன் தான் ஆம்பளை? அவரின் பெயரை உச்சரித்தால் தான் ஆம்பளை என்று பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை" என்றும் அவர் கூறினார்.
சீமான் ரசிகர்களின் முகத்தை இந்த பேச்சு எரிச்சல் அடைய வைத்தாலும் , பொதுவாகவே, நமது அரசியல் பேச்சு முகம் சுளிக்க வைக்கின்றது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியல் மக்கள் அன்றாட வாழ்கையை பிரதிபலிக்கும் ஒரு அடிப்பை உண்மை. ஆனால் அதை விடுத்து, இன்னும் நாம் அரசியலை ஒரு வெற்றியாகவும், ஆண் என்ற அடையாளமாகவும் பார்த்து வருகிறமோ? என்ற கருத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.