Advertisment

மோடி மட்டுமல்ல உலகத்தில் எந்த சக்தியாலும், தமிழர்களை, தமிழ் மொழியை தொட முடியாது - ராகுல் எச்சரிக்கை

நரேந்திர மோடி மட்டுமல்ல, உலகத்தில் எந்த சக்தியாக இருந்தாலும், தமிழர்களை, தமிழ் மொழியை, கலாச்சாரத்தை தொட்டு பார்க்க முடியாது  என்று ராகுல் காந்த் எச்சரிக்கிறேன் என்று சாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
A Rahul

நெல்லையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேச்சு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நரேந்திர மோடி மட்டுமல்ல, உலகத்தில் எந்த சக்தியாக இருந்தாலும், தமிழர்களை, தமிழ் மொழியை, கலாச்சாரத்தையோ தொட்டு பார்க்க முடியாது  என்று ராகுல் காந்த் எச்சரிக்கிறேன் என்று சாடியுள்ளார்.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல்காந்தி நெல்லையில், தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க,சிபி.ஐ, சி.பி.ம், ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

நெல்லையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியதாவது: “எப்பொழுதெல்லாம் இந்த மண்ணுக்கு வருகிறேனோ அப்பொழுதெல்லாம் உங்களது கலாச்சாரத்திற்கும் உங்களது பண்பாட்டிற்கும், உங்கள் தமிழ்மொழிக்கும் முன்பு நான் தலைவணங்கித்தான் வருகிறேன். இந்தியாவிலேயே இந்த ஒரு மாநிலத்தில் இருந்துதான் எல்லோரும் நிறைய செய்திகளையும் பண்பாட்டு தரவுகளையும் படிக்க முடியும். நான் எப்பொழுதெல்லாம் இங்கே வருகிறேனோ அப்பொழுதெல்லாம் தமிழகத்து மக்கள் நெஞ்சில் நிறைய அன்பை என் மீது பொழிகிறார்கள். என்னை நேசித்திருக்கிறார்கள், இதைப் போன்ற ஒரு அருமையான உறவை நான் எங்கேயும் பார்த்ததில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழகத்து மக்களிடம் நான் கொண்டிருக்கின்ற உறவு ஒரு அரசியல் உறவல்ல, அது ஒரு குடும்ப உறவு, அவர்களை நான் ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற உறவு, இந்த மனிதனுடைய விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துகின்ற போது என்னுடைய உறவினர்களே அங்கே போராடுகின்ற மாதிரி ஒரு நிலையை நான் உணர்ந்தேன்.

இன்றைக்கு இந்தியாவிலே, ஒரு பெரிய தத்துவ போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் தந்தை பெரியாரைப் போன்ற தலைவர்கள் போதித்த சமூகநீதி சமத்துவம் விடுதலை; மறுபுறம், நரேந்திர மோடியை போன்றவர்கள் கொண்டாடுகின்ற ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுப்பும் துவேஷமும்.  நரேந்திர மோடி சொல்கிறார், ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்று சொல்கிறார். இந்தியாவில் இருக்கிற எந்த மொழியையும்விட தமிழ் மொழி எந்த விதத்திலும் குறைந்த மொழி அல்ல. 

இந்த நாட்டில் பல்வேறு மொழிகள் பல்வேறு பண்பாடுகள் பல்வேறு கலாச்சாரங்கள் இருக்கின்றன ஒரு கலாச்சாரத்தை விடவோ ஒரு பண்பாட்டு விடவோ ஒரு மொழியை விடவோ மற்றொரு மொழி பண்பாடு கலாச்சாரத்தில் எந்தவிதத்திலும் தாழ்ந்தது இல்லை. தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, தமிழ் என்பது ஒவ்வொருவரும் தங்களை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்கிற வாழ்க்கை முறை; தமிழ் மொழியின் மீது தொடுக்கப்படுகின்ற எந்த தாக்குதலும் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே நான் பார்க்கின்றேன். 

என்னைப் பொறுத்தவரை உங்களுடைய மொழியும் உங்களுடைய கலாச்சாரமும் உங்களுடைய பண்பாடும் எல்லாவற்றையும்விட  எனக்கு மிக மிக முக்கியம். தமிழ் மொழி அல்லாமல் வங்க மொழி அல்லாமல் பேசப்படுகின்ற பல்வேறு மொழிகள் அல்லாமல் இந்தியா என்கிற ஒரு நாடே இருக்க முடியாது.

நம்மைப் பொறுத்தவரை இந்தியாவில் இருக்கின்ற எல்லாவிதமான கலாச்சாரங்களும் பண்பாடுகளும் மிகப் புனிதமானவை என்று கருதுகின்றோம். ஆனால், அவர்களோ ஒரே நாடு ஒரே, தலைவர் ஒரே மொழி என்பதிலே குறிக்கோளாக இருக்கிறார்கள்.


இதனுடைய விளைவு என்னவென்றால் இந்த நாட்டிலே இருக்கின்ற இளைஞர்கள் வேலையில்லாமல், வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.


பிரிட்டிஷார் காலத்தில் இருந்ததைவிட இப்போது இருக்கின்ற இந்தியா சமச்சீர் அற்ற இந்திய வாக இருக்கின்றது; இந்த நாட்டிலே 25 பெரிய பணக்காரர்கள் 75 விழுக்காடு மக்களின் செல்வத்தை தங்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 30 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால், இந்த நாட்டினுடைய பிரதமர் அவருடைய கடன்களை தள்ளுபடி செய்ய தயாராக இல்லை. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய மறுத்த, அதே பிரதமர் இந்த நாட்டினுடைய மிகப்பெரிய பணக்காரர்களுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறார்.


இரண்டு மூன்று விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய தொழில் அதிபர்கள் அவர்கள் யாரும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை அரசு ஒப்பந்தங்களையும் அத்தனை அரசு வழங்குகின்ற மற்ற வசதிகளையும் அவர்கள் மட்டுமே பெற்றுக் கொண்டு அனுபவித்து வருகிறார்கள்.


அதானி அவர்கள் பிரதமருக்கு நெருக்கமானவராக இருப்பதால் பிரதமர் அவருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பதால் இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து துறைமுகங்களும் அனைத்து விமான நிலையங்களும் அனைத்து மின்சாரம் தயாரிக்கின்ற சோலார் பவர் சூரியசக்தி என்று எல்லாவித மின்சார உற்பத்தி செய்கின்ற தொழில்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நாட்டில் இருக்கிற சிறு குறு நடுத்தர தொழில் அனைத்தும் சரக்கு மற்றும் சேவை வரி அநியாயத்த நாளும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகும் சீரழிந்து போயிருக்கிறது.

அனைத்து நிறுவனங்களும் அனைத்து முகவர்களும் ஆர்எஸ்எஸ் சார்ந்த மக்களால் முழுமையாக நிரப்பப்பட்டு இருக்கிறது. இந்த நாட்டில் இருக்கின்ற வருவாய் புலனாய்வுத் துறை, சி.பி.ஐ. வருமானவரித்துறை இவை எல்லாமே ஒன்றிய அரசின் கையிலே எதிரியை அழிக்கின்ற ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நாட்டினுடைய தேர்தல் ஆணையர்களை இந்த நாட்டின் பிரதமர் தான் தேர்ந்தெடுக்கிறார் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கின்றன. தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு இரண்டு முதலமைச்சர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையிலே அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது எதற்காக என்று சொன்னால், இந்த நாட்டினுடைய அனைத்து துறைகளும் அனைத்து இயற்கை வளங்களும் ஒரு மூன்று நான்கு பேரும் முதலாளிகளுக்கு வசதியாக வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். 

அதனால்தான், தமிழ்நாடு எப்பொழுதும் வெள்ள நிவாரண நிதிக்கு பணம் கேட்கிறதோ அப்போது அந்த படத்தை கொடுப்பதற்கு ஒன்றிய அரசு மறுக்கிறது. அதனால், நீங்கள் கொடுத்த வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் உதவி கேட்டபோது இந்த ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை. தமிழ் விவசாயிகள் ஜந்தர் மந்திர் முன்பு போராடிய பொழுது அவளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. என்ன காரணம் என்று சொன்னால் மோடி இந்த நாட்டினுடைய பொருளாதார வசதியின் மீதும் இந்த நாட்டினுடைய ஊடகத்தின் மீதும் முழுமையான தன்னுடைய ஆக்கிரமிப்பை வைத்திருக்கிறார்.

அவர்களின் கட்சியைச் சார்ந்த, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டினுடைய அரசியல் சாசனத்தை உடனடியாக மாற்றுவோம் என்று சொல்கிறார். உலகமெல்லாம் ஒரு நாள் இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று போற்றிய நாள் போய், இந்தியாவை ஜனநாயகம் அழிந்து போகின்ற ஒரு நாடாக இன்று பார்க்கக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இந்த சூழ்நிலையிலே காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் என்ன செய்ய நினைக்கிறது என்பதை உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன். 

இந்தியாவினுடைய எல்லா இளைஞர்களையும் வேலையில்லா திண்டாட்டத்தின் சூழ்நிலையிலே மோடி அவர்கள் திணித்து வைத்திருக்கிற சூழ்நிலையில், அவர்களைப் பற்றி நினைத்து அவர்கள் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் மனமார விரும்புகிறோம்.

இன்று ஒன்றிய அரசிடம் 30 லட்சம் பணியிடங்கள், வேலைகள் காலியாக இருக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த 30 லட்சம் இடங்களையும் உடனடியாக நிரப்புவோம்.

வேலை கிடைப்பதற்கு முன்பு, அந்த இளைஞர்களுக்கு வேலைக்கு பயிற்சி அளிக்கக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் ஒரு தனியார் நிறுவனத்தில் அவர்கள் வேலை பார்த்து பயிற்சி பெற்று அதற்குப் பிறகு அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்வோம்.

இதைப் போன்று டிப்ளமோ படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றவர்கள், என்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றவர்கள், பட்டம் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றவர்கள், இவர்கள் எல்லோருக்கும் வேலை கொடுப்பதற்காக ஒரு தனியாக ஒரு சட்டம் இயற்றி வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம் என்று பெயரிட்டு ஒரு சட்டத்தை நிறைவேற்ற இருக்கிறோம்.

தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞனும் இளம்பெண்ணும் இந்தியாவில் இருக்கின்ற தனியார் நிறுவனங்கள் அல்லது பொது திறமை நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து ஓராண்டு அவர்களுக்கு பயிற்சி அளித்து அந்த ஓராண்டு பயிற்சி பெறுகிற காலத்திலே அவர்களுக்கு அரசு ஒரு லட்ச ரூபாய் வழங்குவோம்.

அவர்கள் அதில் சிறப்பாக தேர்ச்சி பெறுவார்கள் என்று சொன்னால் அந்த வேலையிலே அவர்கள் பணியமத்தப்படுவார்கள்; இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைக்கான பயிற்சி பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்; வேலை பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்; அதன் மூலமாக அவர்கள் வாழ்க்கையில் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு நீட் தேர்வு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்னை. இந்தியா கூட்டணி பொறுத்த வரை நீட் தேர்வை அந்தந்த மாநில அரசுகளின் முடிவு எடுக்க விடுவதாக இருக்கிறோம் மாநில அரசுகள் விரும்பினால் வைத்துக் கொள்ளும் வேண்டும் என்ற விட்டுவிடலாம்

தமிழக மக்கள் தங்களுடைய கல்வித் தரவு எப்படி இருக்க வேண்டும் என்று தங்களுடைய கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்வார்கள் அதுதான் அவர்களுக்கு சரியான தீர்வாக இருக்கும்.

நீட் தேர்வு என்பது ஏழை மக்களுக்கு எதிரானது ஆகவே முடிவை நீங்கள் எடுத்துக் கொள்வதி நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.

இந்தியாவினுடைய விவசாய பெருங்குடி மக்கள் ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்திய போதும் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிய போதும் நீங்கள் அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அந்த விவசாயிகளுக்கு நாங்கள் ஒரு உறுதி சொல்ல ஆசைப்படுகிறோம். அவர்களின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றப்படும் என்று உறுதி கொடுக்கிறோம்.

ஒவ்வொரு விவசாயியும் அவருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யப்படும் ஒன்றிய அரசு அதற்கான உறுதியை தரும். பிரதமர் நரேந்திர மோடி இந்த தேசத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களுக்கு மிகப்பெரிய கடன் தள்ளுபடியைக் கொடுத்து இருக்கிறார்.  ஆனால், எங்களைப் பொறுத்தவரை , நாங்கள் இந்தியாவுடைய ஏழை விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்ய போகிறோம். 

இந்த தமிழகத்தினுடைய பெண்களும் இந்தியாவினுடைய பெண்களும் சரி நம்முடைய தேசத்தோடு எதிர்காலத்தை அவர்தான் பார்த்துக் கொள்கிறார்கள். இவ்வளவு அருமையான பணிகளை செய்கின்ற அவர்களுக்கு நாம் சரியான முறையில் நியாயம் வழங்குகிறது என்றால் இல்லை ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும். 

ஆகவே, அதற்காக இந்தியாவில் இருக்கின்ற ஏழைப் பெண்களுக்காக ஒரு அருமையான திட்டத்தை நாங்கள் அறிமுகம் செய்ய இருக்கின்றோம். 

இந்தியாவிலேயே வறுமையின் பிடியில் இருக்கின்ற அத்தனை குடும்பங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த பெண்ணுக்கு வரக்கூடிய அரசு இந்தியா கூட்டணி அரசு அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, இந்தியாவில் இருக்கும், ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் மாதம் 8,300 ரூபாய் என வருடம் ஒரு லட்ச ரூபாய் தரப்படும். இந்தியாவில் இருந்து வறுமையை நிரந்தரமாக அழிப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு செய்வோம்; இந்தியா கூட்டணி ஆட்சி வந்ததும் நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவோம். பத்தாண்டுகள் என்று மக்களை ஏமாற்ற மாட்டோம்.

இந்தியாவிலேயே ஆஷா பணி செய்கின்றவர்களுக்கும் அங்கன்வாடியில் பணி செய்கின்றவர்களுக்கும் அவர்கள் ஊதியத்தை இரண்டு மடங்காக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

இந்த நாட்டினுடைய பிரதமர் இந்த தேசத்தினுடைய மீனவர்களை முழுமையாக மறந்து விட்டார் புறக்கணித்து விட்டார்; அவர் அவர்களை பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை. நம்முடைய விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நம்முடைய மீனவர்கள முக்கிய. அவர்கள் பேர் ஆபத்துடன் கடலுக்குள் சென்று இந்த மக்களுக்கு உணவு தருகிறார்கள். 

அதற்காக, மீனவர்களுக்கு என்று ஒரு தனி தேர்தல் அறிக்கை நாங்கள் தயார் செய்திருக்கிறோம். அவர்களுடைய படகிற்கான டீசல் மானியத்தை தரப்போகிறோம். அவர்களுக்கான படகுகளுக்கான காப்பீடு தரப் போகிறோம்; அவர்களுக்கு நாங்கள் நாம் கிரெடிட் கார்டு வழங்கப் போகிறோம்; 

உள்நாட்டு மீன் பிடித்தலையும் அக்குவா கல்ச்சர் என்கிற உள்நாட்டு மீன் வளர்ப்பு தொழிலையும் விவசாயத்தைப் போல விவசாயமாக கருத இருக்கிறோம். 

நான் ஏற்கனவே சொல்லியதைப் போல இது ஒரு மாபெரும் தத்துவ போராட்டம்; உங்களுடைய பண்பாட்டுக்காக உங்களுடைய வரலாற்றுக்காக உங்களுடைய கலாச்சாரத்திற்காக உங்கள் மொழிக்காக நாங்கள் தொடுக்கிற யுத்தம் தான் இந்த தேர்தல்.

நானும் காங்கிரஸ் கட்சியும் உங்களோடு என்றும் இருப்போம் உங்கள் பண்பாட்டோடு இருப்போம் உங்கள் மொழியோடு இருப்போம் உங்கள் கலாச்சாரத்தோடு இருப்போம்; 

உங்களுக்கு ஒரு உறுதி சொல்கிறேன் நரேந்திர மோடி மட்டுமல்ல இந்த உலகத்தில் எந்த சக்தியாக இருந்தாலும் அது தமிழர்களையோ, தமிழ் மொழியையோ தமிழ் கலாச்சாரத்தையோ தொட்டு பார்க்க முடியாது என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

இந்த தத்துவப் போர், இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காகவும் நாங்கள் மேற்கொண்டு இருக்கிற யுத்தம். நான் உறுதியாக சொல்கிறேன், நாம் இந்த போரில் வெற்றி பெற போகிறோம். மீண்டும் ஒருமுறை நீங்கள் இங்கு வந்து உங்களுடைய அன்பை என் மேல் பொழிந்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். நன்றி வணக்கம்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi Campaign
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment