தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை முதல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஒரு வார காலம் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதில் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், வரும் 14-ந் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகை தர உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தி தமிழகத்தில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ‘ராகுல் காந்தியின் தமீஜ் வனக்கம் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடும் ராகுல்காந்தி நான்கு மணி நேரம் மட்டும் போட்டியை காண உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில்,
இந்த பயணத்தில் நேரடியாக விமானம் மூலம் மதுரைக்கு வரும் ராகுல்காந்தி அங்கிருந்து போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று பார்வையிட உள்ளார். ராகுல் காந்தியின் வருகை, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கும், தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்கும் தார்மீக ஆதரவை வழங்கும் வகையில் இருக்கும்.
இந்த பயணத்தின் மூலம் ராகுல் காந்தி தமிழக மக்களுடன் தனது நெருக்கத்தை காட்டவும், அவர் அவர்களை எவ்வளவு விரும்புகிறார் என்பதையும் வெளிப்படுத்தும். மேலும் மாநில மக்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பத்தற்கு ஒரு வழியாகும்" என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பயணத்தில் அவர் எந்த அரசியல் உரையும் செய்ய மாட்டார் என்றும், விவசாயிகளுடன் எந்த சந்திப்பையும் திட்டமிடவில்லை என்றும் தெரவித்துள்ள அழகிரி, ஜல்லிக்கட்டு பார்க்க நான்கு மணி நேரம் செலவிடுவார். இதில் அவர் விரும்பினால், விவசாயிகளை சந்திக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியும் என்று கூறியுள்ள திமுக இளைஞர் அணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பதில் அளித்துள்ள அழகிரி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை “ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களும் தங்கள் கட்சி அதிகபட்ச இடங்களில் போட்டியிட விரும்புவார்கள். உதயநிதிக்கு அவர்களின் உதவியாளர்கள், அத்தகைய விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கலாம், அனைத்து கூட்டணி கட்சிகளும் தேவையான இடங்களை கேட்டு பெறும், என தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"