திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தூண்டுதலின் பெயரில் பாஜகவினர் மீது பொய் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் தகுதி நீக்கத்தை கண்டித்து நாகர்கோவில் பாஜக மாவட்ட தலைமையகத்தை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது பாஜக காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் சாலையில் நடத்து சென்ற புகைப்படங்கள் வெளியாகின.
இந்த நிலையில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், மகாராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் தவிர பாஜகவினர் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து பாஜகவினர் தெருமுனை போராட்டம் நடத்தினர்.
தக்கலையில் நடந்த தெருமுனைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன், " திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தூண்டுதலின் பெயரில் இந்த பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மனோ தங்கராஜ் தக்கலையில் போலீஸ் காவடியை தடுக்க முயற்சித்தார். பகவதி அம்மன் கோவிலில் பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் இந்து சமய மாநாட்டை தடை செய்ய முயன்றார். தற்போது பாஜகவினர் மீது பொய் வழக்கு பதிய காரணமாகியுள்ளார்.
மேலும் பாரதிய ஜனதா அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ்காரர்களை கைது செய்ய வேண்டும் என்றார்.
செய்தியாளர் த.இ தாக்கூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“