Advertisment

வில்லேஜ் குக்கிங் சேனல், 'தாத்தாவை' நலம் விசாரித்த ராகுல்

இதய பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi inquired about the health of Village Cooking Channel grandfather

இதய பிரச்னை காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்ற தாத்தா பெரிய தம்பி.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rahul Gandhi | 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு கிட்டத்தட்ட 22 மில்லியன் (2 கோடியே 20 லட்சம்) சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இவர்கள் சமையல் செய்வார்கள். ஒருமுறை தமிழ்நாடு வந்திருந்த ராகுல் காந்தி, இவர்களுடன் இணைந்து சமையல் செய்தார்.

Advertisment

இந்த நிலையில் இந்தச் சேனல் மூலம் புகழ்பெற்ற தாத்தா பெரிய தம்பி இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இவரைத் தொடர்புக் கொண்ட ராகுல் காந்தி, பூரண குணம் அடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெரிய தம்பி வெளியிட்ட காணொலியில், “நான் மருத்துவமனையில் இருக்கும்போது என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ராகுல் காந்தி குறித்து பேசுகையில், “ராகுல் காந்தி என்னிடம் நலம் விசாரித்தார். அப்போது தாத்தா நல்லா இருக்கீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகாது. பூரண குணம் அடைந்து வருவீர்கள்” என்றார் எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment