/indian-express-tamil/media/media_files/2025/08/21/vaazhur-soman-2025-08-21-20-17-00.jpg)
Today Latest Live News Update in Tamil 21 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 21, 2025 20:15 IST
கேரளாவின் பீர்மேடு தொகுதி எம்.எல்.ஏ வாழூர் சோமன் மரணம்
கேரள மாநிலம் பீர்மேடு தொகுதி எம்.எல்.ஏ வாழூர் சோமன் (72) மாரடைப்பால் காலமானார். திருவனந்தபுரம் வருவாய்த்துறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வாழூர் சோமன் மயக்கம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாழூர் சோமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- Aug 21, 2025 19:45 IST
‘சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமயமலை சாதனை செய்தது போல பேசுகிறார்கள்’ - விஜய் பெயர் குறிப்பிடாமல் இ.பி.எஸ் பதில்
த.வெ.க தலைவர் விஜய் பேசியதற்கு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார், “சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமயமலை சாதனை செய்தது போல பேசுகிறார்கள்; ஏதோ மக்கள் செல்வாக்கு பெற்றது போலவும், இந்த நாட்டிற்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்துதான் இந்த நாட்டைக் காப்பாற்றுவது போலவும் பேசி வருகிறார்கள்” என்று கூறினார்.
- Aug 21, 2025 19:14 IST
‘இதுகூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார்’ விஜய் பெயரைக் குறிப்பிடாமல் இ.பி.எஸ் பதில்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய் பெயரை குறிப்பிடாமல், “அ.தி.மு.க யார் கையில் இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். அறியாமையாகத்தான் இதை பார்க்கிறேன். இதுகூட தெரியாமல், ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார் என்றால், அவரை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்? நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், சிலர் சில கருத்துக்களை தன் இஷ்டம்போல் பேசி வருகின்றனர்” என்று கேள்வி எழுப்பினார்.
- Aug 21, 2025 18:29 IST
ரிதன்யா தற்கொலை வழக்கு; மூவருக்கு நிபந்தனை ஜாமின்
ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மூவருக்கும் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது
- Aug 21, 2025 18:27 IST
வேளாங்கண்ணி திருவிழா; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு வரும் 29ம் தேதி நாகை மற்றும் கீழ்வேளுர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
- Aug 21, 2025 16:43 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,850 கன அடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 56,997 கன அடியில் இருந்து 30,850 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடிக்கு தண்ணீர் வெளியேற்றம். அணையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆக உள்ளது.
- Aug 21, 2025 16:31 IST
12%, 28% ஆகிய விகிதங்கள் நீக்கம் - நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
நாட்டில் தற்போது 4 விகிதங்களாக உள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 2 விதிதங்களாக குறைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. 12%, 28% ஆகிய விகிதங்கள் நீக்கப்பட்டு இனி 5%, 18% வரி விகிதங்களை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் தந்தவுடன் 12% வரி விதிப்பின் கீழ் உள்ள 99 % பொருட்கள் 5% கீழ் வரும். 28% கீழ் வரி விதிக்கப்படும் 90 % பொருட்கள் 18 % வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட உள்ளன.
- Aug 21, 2025 16:17 IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை நடத்திய சோதனையில், பையில் மறைத்து வைத்திருந்த 12 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- Aug 21, 2025 15:11 IST
அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை ஸ்டாலின் ஆக.26 அன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
- Aug 21, 2025 15:05 IST
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. : வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 21, 2025 15:04 IST
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் விவாதமின்றி மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேறியுள்ளது.
- Aug 21, 2025 14:31 IST
ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்
ரேபிடோ நிறுவனம் முறையற்ற விளம்பரம் செய்ததாக ரூ.10 லட்சம் அபராதத்தை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. உத்தவாதமான ஆட்டோ, 5 நிமிடத்தில் ஆட்டோ, வராவிட்டால் ரூ.50 பெற்றுக்கொள்ளுங்கள் என்று விளம்பரம். ரேபிடோ விளம்பரங்கள் முறையற்றவை என்று தானாக முன்வந்து விசாரித்த நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் முடிவு. ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த ஆணையம், உடனடியாக விளம்பரத்தை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
- Aug 21, 2025 14:11 IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கி இன்று வரை 21 நாட்கள் நடைபெற்றது. 21 நாட்கள் திட்டமிடப்பட்ட மக்களவை, 34 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
- Aug 21, 2025 13:46 IST
“தெருநாய்களை முற்றிலும் ஒழிக்க முடியாது” - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
“தெருநாய்கள் இல்லை என்றால் எலிகள் பெருகும். அதனால் வரும் ப்ளேக் நோயுடன் போராட வேண்டும். தெருநாய்களை முழுவதாக ஒழிக்க முடியாது. ஆனால் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
- Aug 21, 2025 13:35 IST
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Aug 21, 2025 13:22 IST
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க செயல்முறை வகுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க அரசமைப்பில் காலக்கெடு இல்லை எனக் கூறுகிறீர்கள்; மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஒரு செயல்முறையை வகுக்க வேண்டும்; தவறு நடந்தால் தீர்வு காணப்பட வேண்டும்; அரசமைப்பின் பாதுகாவலர் உச்ச நீதிமன்றம்தான் என்று மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
- Aug 21, 2025 13:01 IST
புதுச்சேரி காவல்துறையில் 14 எஸ்.பி.க்கள் இடமாற்றம்
புதுச்சேரி காவல்துறையில் 14 எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.
- Aug 21, 2025 12:47 IST
கூலி திரைப்படம் ரூ.464.5 கோடி வசூல்
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 7 நாட்களில் உலகளவில் ரூ.464.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- Aug 21, 2025 12:38 IST
விஜய் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கணும் - சீமான் பேச்சு
"விஜய் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். விஜய் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், அதில் உறுதியாக இருக்க
வேண்டும். இந்த மாநாட்டில் அண்ணா, எம்.ஜி.ஆர் படம் உள்ளது. அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, இ.பி.எஸ் படம் வைக்கப்படுமா?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். - Aug 21, 2025 12:33 IST
தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் பயிற்சி!
இந்தியாவில் 1 லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி அளித்து அதில் பொதுமக்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பயிற்சி பெறும் தபால்காரர்கள், மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் என்று அழைக்கப்படுவர். பீகார், ஆந்திரா, ஒடிசா, மேகாலயா ஆகிய 4 மாநிலங்களில் முதல்கட்டமாக இத்திட்டம் அமல் செய்யப்படும்.
- Aug 21, 2025 12:33 IST
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு
அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்வானதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை நிராகரிக்கக் கோரி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்த நிலையில், ஐகோர்ட்டும் நிராகரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டில் தடைவிதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுளள்து. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் வழக்கு விசாரணையை ஐகோர்ட் ஆகஸ்ட் 25-க்கு தள்ளிவைத்தது.
- Aug 21, 2025 11:38 IST
ஜி.எஸ்.டி விகிதத்தை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
ஜி.எஸ்.டி விகிதத்தை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை குறைக்க மாற்று வழிமுறை தேவை என டெல்லியில் அமைச்சர்களின் ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
- Aug 21, 2025 11:26 IST
துணைவேந்தர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.ரவி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகருக்கு பதவி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். இருவரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.
- Aug 21, 2025 11:09 IST
டெல்லி முதல்வருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு ஒன்றிய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. முதல்வர் ரேகா குப்தா மீது ராஜேஷ் கிம்ஜி சகாரியா என்பவர் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- Aug 21, 2025 10:10 IST
தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு!
தங்கம்விலைசவரனுக்குரூ.400 உயர்ந்துஒருகிராம்ரூ. 9230 க்கும்ஒருசவரன்ரூ.73,840க்கும்விற்பனையாகிறது.
- Aug 21, 2025 09:29 IST
தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகைக்கான காரணம், பணி, வாழ்க்கைநிலை, சுகாதாரநிலை குறித்து தொழிலாளர் துறை மூலம் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- Aug 21, 2025 09:00 IST
"மாநில அரசுகளை அச்சுறுத்தும் மசோதா" - கனிமொழி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அச்சுறுத்துவதற்காகவே, முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா தாக்கல் என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? அல்லது மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து உருவாக்கிய அரசா? என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aug 21, 2025 08:53 IST
நாங்கள் பிரதமர் மோடி பக்கம் இருக்கிறோம் - டி.ஆர்.பி. ராஜா
வர்த்தக விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி முக்கியம் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரதமர் மோடி எடுக்கும் முடிவுக்கு பக்கபலமாக இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.
- Aug 21, 2025 08:36 IST
நாய் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னையில் நாய்களை பொது இடங்களில் முகமூடி இல்லாமல் அழைத்துச் சென்றால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- Aug 21, 2025 08:19 IST
விஜயை விமர்சித்த இபிஎஸ்
புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் அதிமுக தலைவர்களின் படத்தை பயன்படுத்துகிறார்கள் என ராணிப்பேட்டை சுற்றுப்பயணத்தின் போது தவெக தலைவர் விஜயை மறைமுகமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
- Aug 21, 2025 08:14 IST
கலந்தாய்வில் கணிசமாக உயர்ந்த மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில்பொறியியல்படிப்புகளுக்கானமாணவர்சேர்க்கைகடந்த 6 ஆண்டுகளைவிடஅதிகரித்துள்ளது. கடந்தமாதம் 7 ஆம்தேதிமுதல்நடைபெற்றுவரும்கலந்தாய்வில் 1.45 லட்சம்இடங்கள்நிரம்பியுள்ளன.
- Aug 21, 2025 07:48 IST
இந்தியா கூட்டணி வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல்
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் என்.டி.ஏ சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.