மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இளங்கோவன் மனைவி வரலஷ்மிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து இருப்பதாவது;
அன்பிற்குரிய வரலஷ்மி இளங்கோவன், உங்கள் கணவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய காங்கிரஸ் குடும்பத்தின் உறுப்பினரை நாம் இழந்துள்ளோம்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொது வாழ்வில் அளப்பரிய துணிச்சலை வெளிப்படுத்தினார். அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் திறமை வாய்ந்தவர். பெரியாரின் முற்போக்கு சிந்தனைகள் மற்றும் இலட்சியங்களுக்கான அவரது தீவிர அர்ப்பணிப்பால் அவரது புகழ்பெற்ற அரசியல் பயணம் வழிநடத்தப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அவரின் செயல்பாடுகள் நினைவுகூரத்தக்கது.
அவரை இழந்த உங்கள் வேதனையையும் துக்கத்தையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. தயவுசெய்து என் இதயப்பூர்வமான இரங்கலை ஏற்றுக் கொள்ளவும். இந்தக் கடினமான நேரத்தில் என்னுடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் இருக்கும்.
/indian-express-tamil/media/post_attachments/51c984e1-912.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“