காங்கிரஸ் மூத்த தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 12) தமிழ்நாடு வருகிறார்.
நீலகிரி மாவட்டம் உதகைக்குச் செல்லும் ராகுல் காந்தி அங்கு சாக்லேட் தயாரிக்கும் தொழிலாளர்களையும், கூடலூரில் பழங்குடியின மக்களையும் சந்தித்து பேசுகிறார்.
அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் ராகுலின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ராகுல் பங்கேற்று பேசினார். இந்த நிலையில் மீண்டும் எம்.பி பதவி பெற்று நிலையில் ராகுல் தன்னுடைய தொகுதியான கேரளாவின் வயநாட்டிற்கு இன்று செல்கிறார். அங்கு முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து தேநீர் அருந்துகிறார்.
அதன்பின் சாக்லேட் தயாரிக்கும் தொழிலாளர்களை சந்திக்கிறார். நீலகிரி செல்லும் வழியில் முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று, அங்கு மக்களிடம் கலந்துரையாடுகிறார். அதன்பின் சாலை மார்க்கமாக கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார். ராகுல் காந்தியின் வருகையையொட்டி நீலகிரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“