scorecardresearch

ராஜீவ் காந்தி நினைவு தினம்: மே 21 ஆம் தேதி ராகுல் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருகை

ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு ராகுல் காந்தி 21-ம் தேதி வரும்போது, காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு தினமான மே 21 ஆம் தேதி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தருகிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ம் ஆண்டு நினைவுதினம் வரும் 21-ம் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் ராகுல் காந்தி பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மூலம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஏற்படுத்தியிருக்கும் ஆட்சி மாற்றம் 2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் அமைந்துள்ள மோடியின் பாசிச, ஜனநாயக விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.

பாஜக ஆட்சியை அகற்றும் பேராற்றலும், வல்லமையும் மிக்க தலைவராக ராகுல் காந்தி விளங்கி வருகிறார். எனவே, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு ராகுல் காந்தி 21-ம் தேதி வரும்போது, காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rahul gandhi visits sriperumbudur on may 21 rajiv memorial

Best of Express