/tamil-ie/media/media_files/uploads/2023/06/shoba1.jpg)
செந்தில் பாலாஜி நணபர் வீடுகளில் சோதனை
கரூர், சென்னையில் தமிழக மின்சாரம், மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார், அவரது உறவினர்கள், நண்பர்கள் ஒப்பந்ததாரர் உள்ளிட்டவர்களின் வீடுகள், கல்குவாரி, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மே மாத இறுதியில் சோதனை நடத்தினர்.
அதன் பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கடந்த 12-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில்பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம் அவரது, சகோதரர், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் முடிவில் கடந்த 13-ம் தேதி அதிகாலை செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது சக்தி மெஸ் பங்குதாரர்கள் கார்த்தி, ரமேஷ் ஆகியோர் வீடுகளில் சில அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இப்போது அந்த வீடுகளில் சீலை அகற்றி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கரூர் ஈரோடு சாலையில் சக்தி மெஸ் நடத்தி வரும் பங்குதாரர்கள் ரமேஷ், மெஸ் கார்த்திக். இவர்களது வீடு ஈரோடு ரோடு கோதை நகர் அன்னை அப்பார்ட்மெண்ட்டில் உள்ளது. இங்கு இன்று 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.
இதில் மெஸ் கார்த்தி தி.மு.க.வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ளதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. மெஸ் கார்த்தியின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் ஆகும். இவர் தொழில் காரணமாக கரூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கரூரில் மீண்டும், மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருவது தி.மு.க.வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.