தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் தலைமை செயலக அறையிலும் இந்தச் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையின் போது பாதுகாப்புக்கு சென்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்களை 6ஆவது நூழைவு வாயிலில் தமிழக போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் அறைகளில் சோதனை நடந்துவருகிறது. ஏற்கனவே கரூர் மற்றும் கோயம்புத்தூரில் கடந்த மாதம் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
இந்தச் சோதனையானது அரசு ஒப்பந்ததாரர், செந்தில் பாலாஜியின் நண்பர்கள், வழக்குரைஞர், உறவுக்காரர் இல்லங்கள், அலுவலகங்கள் என நடந்தது.
அப்போது வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டார். அவர் சென்ற கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் பிணையில் வெளிவந்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி அலுவலகம் மற்றும் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“