scorecardresearch

கன்னியாகுமரியில் சிதறால் ராஜேந்திரன் வீட்டில் ரெய்டு.. பரபரப்பு

சிதறால் ராஜேந்திரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Raid on Rajendrans house in Kanyakumari
தொழில் அதிபர் சிதறால் ராஜேந்திரன் வீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல தொழில் அதிபர் சிதறால் ராஜேந்திரன் வீ’டு உள்பட 17 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனை ஒரே நேரத்தில் அவரது வீடு, ஆடிட்டர் இல்லம், நட்சத்திர விடுதி என நடந்துள்ளது. இந்தச் சோதனையில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் வருமான வரித்துறை யினர் 20 இடங்களில் மேற்கொண்ட சோதனை அப்பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையில் தொழில் அதிபர் சிதறால் ராஜேந்திரன் மீது சில புகார்களும் எழுந்துள்ளன. அவரின் குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாக அந்தப் புகார்கள் நீள்கின்றன.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Raid on rajendrans house in kanyakumari