/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project64.jpg)
Hindu munnani kadeswara subramaniam
தங்கள் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்தாவிட்டால் 2024-ல் அமித்ஷா மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகும் போது காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் ரெய்டு நடைபெறும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் எச்சரிக்கை
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அக்கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய காடேஸ்வரா சுப்ரமணியம், "2024-ல் அமித்ஷா மீண்டும் உள்துறை அமைச்சராக வருவார். உங்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும். காவல்துறையில் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும். ஏ.சி பதவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்யவா பணம் கொடுத்து வருகிறார்கள்?. இவர்களுக்கு எங்கு போதை பொருள் விற்கப்படுகிறது என்று தெரியாதா?. அதிகாரிகள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். எங்கள் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பதில் சொல்ல வேண்டும்" என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.