தமிழகத்தில் 7-ம் தேதி முதல் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்: ரயில்வே வாரியம் பட்டியல்!

சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

railway announced
railway announced

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக 7 சிறப்பு ரயில்களைச் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழகத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து செப்டம்பர் 7ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தமிழக அரசு அற்வித்துள்ள நிலையில், முதல் கட்டமாக 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் செப்டம்பர் 7ம் தேதி இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சகம், சென்னையிலிருந்து 6 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே, வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காகவும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு சிறப்பு ரயில்கள் ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் முதல்கட்டமாக செப்டம்பர் 7ம் தேதி 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில், கோவை-மயிலாடுதுறை (வாரத்தில் 6 நாள்கள்), மதுரை-விழுப்புரம் இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (தினசரி), திருச்சி-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (தினசரி), கோயம்புத்தூா்-காட்பாடி எக்ஸ்பிரஸ் ரயில் (தினசரி), திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய 7 சிறப்பு ரயில்கள் வரும் 7-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.

பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக வட்ட வடிவில் கோடுகள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ரயில் நிலைய நுழைவு வாயிலில் நுழையும் போது, முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத பயணிகள் ரயில் நிலையத்திலும், ரயிலில் செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், ரயில் நிலையங்களில் பயணிகள், ஹேண்ட் சானிடைசர் மூலம் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். அதோடு, ரயில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி ரயிலில் ஏறவும் இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதனுடன், தமிழகத்தில் 6 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய ரயில்வே அமைச்சகத்திர்கு கோரிக்கை வைத்திருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே அமைச்சகம், சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

சென்னை எழுப்பூரில் இருந்து 2 சிறப்பு ரயில்களும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 ரயில்களும் 7ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Railway announced 7 express rail will operated on september 7th in tamil nadu

Next Story
தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்தார் நடிகர் எஸ்.வி.சேகர்sv shekher, sve shekher, sv shekar, sv shekher reveal sorry, எஸ்வி சேகர் வருத்தம், தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் எஸ்வி சேகர், sve shekher sorry in national flag contempt case, chennai high court, bjp,sve shekher sorry, tamil nadu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com