தமிழகத்தில் ரயில்வே மருத்துவர், மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் இந்திய ரயில்வேவில் பணிபுரியும் மருத்துவருக்கும் அவருடைய மகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடைய குடும்பத்தினர், சக பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Coronavirus, India Lockdown, coronavirus india, Tamil Nadu, ரயில்வே மருத்துவருக்கு கொரொனா பாதிப்பு, தமிழ் நாடு, கொரொனா வைரஸ், மருத்துவரின் மகளுக்கும் கொரொனா பாதிப்பு, Doctor Tamil Nadu, Tamil Nadu, indian Railways, covid 19, Tamil indian express, coronavirus, corona, coronvirus news, latest update coronavirus
தமிழகத்தில் இந்திய ரயில்வேவில் பணிபுரியும் மருத்துவருக்கும் அவருடைய மகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடைய குடும்பத்தினர், சக பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Advertisment
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிரிழந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் இந்திய ரயில்வேயில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடைய மகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ரயில்வே அலுவலக வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
Advertisment
Advertisements
ரயில்வே மருத்துவருக்கும் அவருடைய மகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய குடும்பத்தினர் மற்றும் சக மருத்துவப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.
இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்தான ரயில்வே துறை நிர்வாகத்தில் 2வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கிழக்கு ரயில்வேயில் 57வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் ரயில்வே மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து ரயில்வே வளாகங்களும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன என்று வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன. "சுகாதாரத் துறை ஆலோசனையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நெறிமுறைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம்" என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"