Railway gate closed without announcement stir in Trichy: திருச்சி அருகே குமாரமங்கலம் ரயில் நிலையம் அருகே முன்னறிவிப்பின்றி பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் ரயில் பாதையை கடக்க முடியாமல் தவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருச்சி - புதுக்கோட்டை ரயில் மார்க்கத்தில் கீரனூர், குமாரமங்கலம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் இன்று திடீரென முன் அறிவிப்பின்றி பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டது. இந்த பகுதியை கடந்துதான் நகரத்திற்கு செல்வோர் செல்லவேண்டும்.
இதையும் படியுங்கள்: ‘அக்னி பாத்’ எதிர்ப்பு: தமிழகத்தில் முதல் போராட்டம் திருச்சியில்!
இந்தநிலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கேட் திறக்கப்படாத நிலையில் அந்தப்பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு செல்ல அந்த வழியாக வந்தார். ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததை கண்ட பொதுமக்கள் கேட்டை திறக்க அறிவுறுத்தினர். ஆனால் ரயில்வே ஊழியர்கள் கேட் திறக்க வாய்ப்பில்ல்லை என்று கூறிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடப்பட்டது ஏன் என ரயில்வே ஊழியர்களிடம் கேட்டு வாக்குவாதம் செய்ததோடு அப்பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil