/indian-express-tamil/media/media_files/VmKtaOGii6kt7Qfo6gZD.jpeg)
இனி ஆன்லைனிலே முன்பதிவு இல்லா டிக்கெட்டை எடுக்கலாம்
ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் எடுப்பதற்காக பணம் கொடுக்கத் தேவையில்லை. ஆன்லைன் மூலமே டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் டிக்கெட்களை எடுக்கும் ஆப்ஷனை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது. 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பிற்கு பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. இன்று யு.பி.ஐ எனப்படும் வசதி மூலம் செல்போன் மூலமே ஒருவர் சுலபமாக பணத்தை மற்றவருக்கு அனுப்ப முடிகிறது.
இன்று சிறிய கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை இந்த யு.பி.ஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை வைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வது இன்று பெரும்பாலான இடங்களில் அறிமுகமாகி விட்டாலும், ஒரு சில இடங்களில் இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது.
குறிப்பாக பேருந்துகளில் டிக்கெட் எடுப்பது, ரயிலுக்காக டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட இடங்களில் இன்றளவும் நேரடியாக பணமே பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய ஒருசில இடங்களில் வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுக்கும்போது தாராளமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நேரடியாக டிக்கெட் கவுண்டரில் சென்று டிக்கெட் எடுக்கும் போது அங்கு பணத்தை மட்டுமே கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அங்கு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் யு.பி.ஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் பயணிகள் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை இனி பணம் கொடுத்து எடுக்க வேண்டிய தேவை இல்லை. டிஜிட்டல் பரிமாற்றம் செய்து எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ரயில்களில் பயணிக்கும் பயணிகளில் பலர் இப்படி டிஜிட்டல் பரிவர்த்தனை வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்கள் வைத்து வந்தனர். மத்திய அரசு தற்போது அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள அதன் ஒரு படியாக இனி முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகளையும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனையில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.