Railway minister Piyush goyal released animation video of pamban new bridge : ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் செல்ல மிகவும் முக்கியமான போக்குவரத்து வசதியாக செயல்படுவது மண்டபம் மற்றும் பாம்பன் இடையே அமைந்திருக்கும் பாலம் ஆகும். ஏற்கனவே இருக்கும் பாலத்தின் அருகே ரூ. 250 கோடி மதிப்பீட்டில் புதிய இரட்டை தளம் கொண்ட பாலம் கட்டுவதற்கு மோடி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். கடலின் நடுவே தூண்கள் அமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தை ராமநாதபுரத்தோடு இணைக்கும் பாம்பன் பாலத்தின் 2 கி.மீ பாதையின் புதிய திட்டத்தை அனிமேசன் காட்சிகளாக வெளியிட்டார் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
2.15 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் ரயில்கள் எவ்வாறு இயக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதே நேரத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பாலம் திறக்கும் வண்ணமாக அமைந்திருக்கும். ஆனால் புதிதாக கட்டப்பட இருக்கும் பாலம், கப்பல் போக்குவரத்தின் போது மேலே தூக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil