Railway Officer honored a retired employee in Trichy
திருச்சியில் பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியரை, தனது இருக்கையில் அமரச் செய்து அருகில் நின்று பாராட்டு தெரிவித்துள்ளார் ரயில்வே உயர் அலுவலர் ஒருவர்.
Advertisment
வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான நாகராஜன், தெற்கு ரயில்வே, திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில், வணிகப் பிரிவில் பதிவேடுகள் எழுத்தராக பணிபுரிந்து, புதன்கிழமை மாலை பணிநிறைவு பெற்றார்.
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரை மேலாளர் இருக்கையில் அமரவைத்து கௌரவித்த பெண் அதிகாரி
அவரது பணி ஓய்வு பிரிவு உபசார நிகழ்வின்போது நாகராஜனை கௌரவிக்கும் விதமாக, உயர் அலுவர்களில் ஒருவரான திருச்சி கோட்ட வணிக மேலாளர் மோகனப்ரியா, நாகராஜனை தனது இருக்கையில் அமரச்செய்து, அவரது குடும்பத்தினருடன் அருகில் நின்று பாராட்டியுள்ளார். அந்த புகைப்படம் இப்போது வைரலாகி உள்ளது.
Advertisment
Advertisements
மனிதாபிமானம் அற்றுப்போய்விட்டது என எண்ணும் நிலையில், இப்படியும் சில அலுவலர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என பாராட்டும் ரயில்வே ஊழியர்கள் அந்த நிகழ்வை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“