பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய ரயில் பாதை திட்டத்தை மீண்டும் தொடங்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள தொழில் பூங்காக்கள், தொழிற்சாலைகளைகள் சரக்குகளை கொண்டு செல்ல உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. ஆனால், இப்பகுதியில் ரயில் போக்குவரத்து இல்லை. அதனால், பொதுமக்கள், தொழில்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினரின் கோரிக்கைகளுக்குப் பிறகு, ஸ்ரீ பெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே 60 கி.மீ நீளத்துக்கு ரூ.839 கோடி செலவில் ரயில் பாதை அமைக்கப்படும் என்று 2013-14ம் ஆண்டு பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டது.
இதையடுத்து, ரயில்பாதை அமைப்பதற்காக நிலத் தேவை உள்ளிட்ட பிற விவரங்களைக் கண்டறிய ஒரு சர்வே நடத்தியது. ஆனால், இந்த புதிய ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கப்படவில்லை. ரயில்வே முன்னுரிமை திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பியதால், ரயில்வே வாரியத்தால் முடக்கப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்களில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில்தன், ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்ச்சேரி இடையே புதிய ரயில்பாதை திட்டத்தை தொடங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய புதிய ரயில் பாதை திட்டத்தை தொடங்க ரயில்வே வாரியத்திடம் மண்டலம் கூறியுள்ளது. இந்த பகுதிகளில் பயணிகள் மற்றும் சரக்குகள் போக்குவரத்துக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று அதிகாரிகள் வட்டாரம் கூறுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே புதிய ரயில்பாதை திட்டம் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட பிறகு, புதிய வழித்தடத்திற்கான ஆய்வுகள் மற்றும் பிற அடிப்படையான பணிகளுக்காக ரயில்வே இதுவரை சுமார் 48 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் இந்த திட்டத்தின் மற்ற அடிப்படையான பணிகளுக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு, இந்த திட்டம் கைவிடப்படுவதை தடுக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் ஆயிரக் கணக்க்கான மக்களுக்கு சாலை வழியான போக்குவரத்து வசதி மட்டுமே உள்ளது. இதனால், இந்த புதிய ரயில் பாதை பொதுமக்களின் போக்குவரத்துக்கு உதவியாக இருக்கும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த புதிய ரயில் பாதையானது தொழில்பூங்காக்களுக்கு இடையே உள்ள பகுதியை மேம்படுத்த உதவும். ஆனால், இந்த புதிய ரயில் பாதை திட்டத்தை முடிக்க நீண்ட காலம் ஆகும். அதே நேரத்தில், சரக்கு ரயில்களை இயக்கப் பயன்படும் வகையில் பாதையை விரிவாக்க ரயில்வே திட்டமிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஜப்பான் சர்வதேச கூட்டு நிறுவனம், சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடம் தொடர்பான துறைமுக இணைப்பு குறித்த அறிக்கையில், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுடன் தொழில் மையங்களை இணைக்க குறுகிய கால தீர்வாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதிகளை இணைக்கும் ரயில் பாதை, ஆவடி முதல் கூடுவாஞ்சேரி வரை புதிய ரயில் பாதை குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.