மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், இந்திய ரயில்வே துறையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களை தனியார் ஆப்பரேட்டர்கள் மூலம் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதன் மூலம், 100 ரயில்வே வழித்தடங்களை பிரித்து, தனியார் ஆப்பரேட்டர்களை, 10-12 ரயில்வே கிளஸ்டர்களில் 150 ரயில்கள் வரை இயக்க அனுமதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தால் தம்பரம் ரயில்வே நிலையம் ஒரு முக்கிய முனைய நிலையமாக மாறயிருக்கிறது. இதன் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மற்றும் சென்னை எக்மோர் நிலையத்தின் தேவையும் குறைய வாய்ப்புள்ளது.
வெளியிடப்பட்ட வரைவு ஆவணங்களின் படி , தம்பரத்தில் முதல் மதுரை வரையிலான ரயில், தம்பரம் முதல் திருநெல்வேலி வரையிலான ரயில் , தம்பரம் முதல் திருச்சிராப்பள்ளி வரையிலான ரயில் , கன்னியாகுமரி முதல் தம்பரம் வரையிலான ரயில் போன்ற ரயில்வே சேவைகள் புதிதாக இயக்கப்பட உள்ளன.
கட்டணங்கள் சேகரிப்பதற்கான உரிமைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவையை வழங்கும் திறன் ஆகியவை ஆபரேட்டர்களுக்கு வழங்கப்படும்.
தற்போதைய தேஜாஸ் எக்ஸ்பிரஸ், எக்மோர் முதல் திருச்சிராப்பள்ளி வரை நான்கு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது . தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டால், மூன்று முதல் 3.5 மணி நேரமாக குறைக்கபடாலம்.