Advertisment

ரயில் தண்டவாளத்தில் டயர் வைத்த மூவர் கைது: விரைந்து செயல்பட்ட ரயில்வே எஸ்பி

கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் வாளாடி வரும்போது தண்டவாளத்தில் வைக்கப்பட்ட டயர்கள் மீது மோதி ரயில் இன்ஜின் பெட்டியில் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு நான்கு பெட்டிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
Jun 15, 2023 10:48 IST
ரயில்வே எஸ்பி

ரயில்வே எஸ்பி

கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் வாளாடி வரும்போது தண்டவாளத்தில் வைக்கப்பட்ட டயர்கள் மீது மோதி ரயில் இன்ஜின் பெட்டியில் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு நான்கு பெட்டிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது.

Advertisment

இது குறித்து திருச்சி காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் எட்டு தனி படைகள் அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் வாளாடி பகுதியைச் சேர்ந்த அண்ணாவி பிரபாகரன், கார்த்திக் ,வெங்கடேஷ் மூன்று பேர் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் விரத்தி அடைந்த மூவரும் தண்டவாளத்தில் டயர் வைத்ததாக ரயில்வே போலீசாரின் விசாரணையில் தெரிவித்தனர்.

publive-image

உள்ளூர் பிரச்னைக்காக சதி மற்றும் நாச வேலையில் ஈடுபட்டதால் இந்திய ரயில்வே சட்டத்தின் 150 (i)(a)கீழ் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து எஸ் பி செந்தில்குமார் தெரிவிக்கையில்; தண்டவாளத்தில் தீய செயல்கள் செய்வது, பொருட்களை வைப்பது , சதி செயலில் யாரும் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மண்டல கண்காணிப்பாளர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

மேலும், ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுத்து 764 கிலோ கஞ்சா கைப்பற்றி உள்ளோம். கஞ்சா வேட்டை தொடரும் எனவும் தெரிவித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment