சென்னை தாம்பரம் ரயில்நிலையம் அருகே, இளம்பெண்ணை கிண்டல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நாயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீனிவாசன் நாயர் (32 வயது), நேற்று இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சுரங்கப்பாதை வழியாக ஜி.எஸ்.டி., சாலையை கடந்து சென்ற ஒரு இளம்பெண்ணை பின்தொடர்ந்து கிண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பெண்ணின் உறவினர் தட்டிக்கேட்டுள்ளார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபொழுது கைகலப்பாக மாறியுள்ளது.
அந்த பெண்ணுக்கு ஆதரவாக தட்டிக்கேட்ட வழக்கறிஞரை சப்- இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த பொதுமக்கள், சப்-இன்ஸ்பெக்டரை தட்டி கேட்டுள்ளனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பொது, தகராறில் ஈடுபட்ட சப்- இன்ஸ்பெக்டர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மேலும், பொதுமக்கள் எடுத்த விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வர தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் காவல்துறையினர் ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டரை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil