காந்திதாம் சந்திப்பில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு வரை செல்லும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு நாகர்கோவில் மாவட்டம் அருகே பார்வதிரபுரம் பகுதியில் சென்றது. அப்போது ரயில் கற்களின் மீது மோதியதால் நல்ல சத்தம் ஏற்பட்டது.
இதனால் ரயிலை நிறுத்தி, அதன் ஓட்டுநர் என்ன நடந்தது என்று பார்த்த போது ரயிலின் தண்டவாளத்தில் கற்கள் மற்றும் மாட்டின் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் ரயில் ஓட்டுநர் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலிசாருக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில் ரயில்வே போலிசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“