/tamil-ie/media/media_files/uploads/2022/04/Train-1.jpg)
Southern Railway
மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் நடந்து வரும் நிலையில் பல முக்கிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன் முழு விவரம் இங்கே
மதுரை கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணிகளை எளிதாக்கும் வகையில் நிலைத்த நேர வழிநடத்தும் தடையமைப்பு (Fixed Time Corridor Block) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கீழ்க்கண்ட ரயில்வே பயண திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
மாறும் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:
ரயில் எண் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்
13, 14, 16, 17, 18, 20, 21, 23, 24, 25, 27, 28 மற்றும் 30ம் தேதி ஜூன் 2025 அன்று காலை 06.55 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் இந்த ரயில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும்.
கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.
பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
ரயில் எண் 07229 கன்னியாகுமரி – சார்லபள்ளி சிறப்பு ரயில்
20 மற்றும் 27ம் தேதி ஜூன் 2025 அன்று காலை 05.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும்.
மதுரை, கொடைக்கானல் ரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் நிற்காது.
மானாமதுரை மற்றும் காரைக்குடியில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும்.
ரயில் எண் 12666 கன்னியாகுமரி – ஹவுரா விரைவு எக்ஸ்பிரஸ்:
14, 21 மற்றும் 28ம் தேதி ஜூன் 2025 அன்று காலை 05.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும்.
மதுரை மற்றும் திண்டுக்கலில் நிற்காது.
மானாமதுரை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
ரயில் எண் 16847 மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்
15, 18, 22, 25 மற்றும் 29ம் தேதி ஜூன் 2025 அன்று பிற்பகல் 12.10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் கள்ளிகுடியில் நிற்காது.
புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை மற்றும் அருப்புக்கோட்டையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
ரயில் எண் 16788 ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஶ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்
19 மற்றும் 26ம் தேதி ஜூன் 2025 அன்று இரவு 10.30 மணிக்கு கட்ராவில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருச்சி, காரை க்குடி, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு மற்றும் மதுரையில் நிற்காது. புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் மானாமதுரையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
பகுதி ரத்து செய்யப்படும் ரயில் சேவை:
ரயில் எண் 16322 கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
15ம் தேதி முதல் 30ம் தேதி ஜூன் 2025 வரை கோயம்புத்தூரில் இருந்து காலை 08.00 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை ரத்து செய்யப்படும்.
இந்த ரயில் திண்டுக்கலில் நிறுத்தப்படும். (short-terminated).
மாற்று நேரத்தில் இயக்கப்படும் ரயில் சேவை:
ரயில் எண் 07192 மதுரை – காச்சிக்குடா சிறப்பு ரயில்
18 மற்றும் 25ம் தேதி ஜூன் 2025 அன்று காலை 10.40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், 1 மணி 20 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 12.00 மணிக்கு புறப்படும்.
தகவல் மற்றும் பயண ஏற்பாடுகளுக்காக அனைத்து பயணிகளும் இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.