திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18-ம் தேதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சாலைகளில், வீடுகளில் வெள்ளம் நீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்குள்ளானகினர்.
பலர் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். நகரம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் வரும் 31-ம் தேதி கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக ன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து மொத்த நீர் திறப்பு 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 5000 கன அடியாக அதிகரிக்கப்படும்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து மொத்த நீர் திறப்பு 2000 கன அடியாக அதிகரிப்பு. இன்று மாலைக்குள் 5000 கன அடியாக அதிகரிக்கப்படும். மழை மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“