தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று (பிப்.20) தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த சில ஆண்டுகளாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதத்தில் தென் மாவட்டங்களில் வரலாறு காண மழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.6000 நிவாரணம் வழங்கியது.
வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு சென்ற மத்திய குழு இன்னும் முழுமையான நிவாரண நிதியை வழங்கவில்லை. அரசு சார்பில் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.208 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“