/indian-express-tamil/media/media_files/wz1Xgd1OqMZ72ZJLP4oN.jpg)
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளது. எனினும் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே மழை தொடங்கி உள்ளது. இன்று முதல் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு அக்.16 அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொண்டு கண்காணிக்க மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்ட்டுள்ளனர்.
திருவொற்றியூர் பகுதிக்கு சமீரன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மணலிக்கு குமரவேல் பாண்டியன், மாதவரத்துக்கு மேகநாத ரெட்டி, தண்டையார்பேட்டைக்கு ஆர் கண்ணன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டைக்கு பிரதாப், கோடப்பாக்கத்திற்கு விசாகன், ஆலந்தூருக்கு அமித், அடையாறுக்கு செந்தில் ராஜ் உள்பட 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களை தொடர்பு கொள்ள தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மண்டலங்களை சேர்ந்தவர்கள், பருவமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதால், சம்மந்தப்பட்ட மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவியை பெறலாம். அவர்களின் மொபைல் போன், தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us